Wednesday, July 11, 2012

பயண வழி உணவகமும் ....பகல் கொள்ளையும்.


போன வாரம் கடலூரிளுருந்து சென்னை வந்த என்னோட மிக மோசமான அனுபவம் தான் இந்த தலைப்பு.

செவ்வாய் (10/07/2012) காலை 6.30 க்கு ஆரம்பித்த என்னோட பயணத்துல பாண்டிச்சேரி பார்டர் வந்ததும், போலீஸ் காரங்க ஓடி வந்து ஏறு வாங்கன்னு பார்த்தா, வண்டிய   ஓரங்கட்டி  அப்படி  நிறுத்துன்னு சொல்லிட்டாங்க.

என்னடா ஒரே போலீஸ் கூட்டமா  இருக்குனு கேட்டா, பாண்டிச்சேரி  ஸ்ட்ரைக் அப்படின்னு சொன்னாங்க, ஒரு வேலை சென்னைல ஹெல்மெட் போடலனா மட்டும் புடிக்கற மாதிரி. (பைக் திருடன் ஹெல்மெட் போட்டா போதும்)  ,  பஸ் டிரைவர் எல்லோரும் ஹெல்மெட் போடனும்மோன்னு நெனைச்சான். பரவாயில்லை அந்த மாதிரி எதுவும் இல்லனு சொல்லிட்டாங்க...

30 to 45 நிமிடத்துக்கு பிறகு, பஸ்சுக்கு பலத்த பாதுகாப்பு. அப்புறம் பஸ் நிலையம் வந்தா அதே கதை, ஒரு மணி நேரம்  கழித்து  பஸ் வெளிய வந்து கிழக்கு கடற்கரை சாலை டோல் கேட்  தாண்டின பிறகு பஸ் பாதுகாப்பு இல்லாம பயனத்த தொடங்கியது.

இங்க தான் நம்மோட ஹீரோ (பயண வழி உணவகம்) என்ட்ரி. சரியா கல்பாக்கதுக்கு முன்பாக  இரண்டு/மூன்று கிலோ மீட்டர் தூரத்துல வண்டிய நிறுத்துனங்க.

இங்க கீழ இருக்கு பாருங்க இது தான் அந்த உணவகம்.








இருண்டு நபர் மட்டுமே சிறு நீர் கழிக்க கூடிய toilet , நம்பர் 2 போறவங்க நிலைமை படு மோசம், ஒடிந்த கதவு, தண்ணீர் வராத குழாய். 

சரி எப்படியும், கலை உணவு இங்க தான் சாப்பிடனும்னு (பாண்டிச்சேரி ஸ்ட்ரைக் பயனத்த நீட்டி விட்டதால).
நன்கு இட்லி என்ன விலைன்னு கேட்ட 25 ருபாய், சரி பரவா இல்லனு 100 ருபாய் குடுத்தா , சில்லறை குடுங்க சார் , பக்கத்துல எட்டன தூரம் வரை ஒரே ஒரு பெட்டி கடை ,அதுவும் இவங்கலோடது தான், அப்புறம் புரிந்தது, நாம எதாவது அந்த கடைல வாங்கணும்  அப்படிங்கறது அவங்களோட பிளான் (என்னமா ரூம் போடு யோசிகரங்க வால்மார்ட்,இங்க வந்தா இவங்க கிட்ட பிச்சை எடுக்கணும்).

அந்த கடைல Slice Bottle 350 ml குடுங்க  அப்படின்னு கேட்ட 40 ருபாய் சார், எனக்கு ஒன்னும் புரியல [ பிக் சூப்பர் மார்க்கெட் விலை 1.2L X 2 பாட்டில் 80  ருபாய்]. இதனோட விலையே 20 ருபாய் தான்.

இது போல எந்த பொருள் எடுத்தாலும், இரண்டு மடங்கு விலை. 

அந்த இடத்துல இருந்து இரண்டு/மூன்று கிலோ மீட்டர் தூரத்துல கல்பாக்கம் பஸ் நிலையம். அங்க நிறுத்தமா இங்க எதுக்கு நிருதுராங்கன்னு கேட்டா பஸ்ல வந்தா அதனை பெரும், இந்த டிரைவரும், கண்டக்டரும் ஓசில சாப்பிட காட்ல நிருத்தரங்கனு ஒரே பொலம்பல்.

அவங்க சொன்ன மாதிரியே, கண்டக்டரும்/டிரைவரும் ஓசில சாப்டுட்டு, பார்சலோட வந்தாரு. இதுல அது மட்டும் இல்லாம பக்கத்துக்கு பஸ் கண்டக்டர் aquafina / cigarette கைல.


சரி இந்த கண்டக்டர் விட கூடாதுன்னு, வந்தா ஒடனே எதுக்கு நிருத்தினிங்க அப்படின்னு கேட்ட, சொன்னாரு பாருங்க ஒரு பதில்.

இந்த கடை அரசு அங்கீகாரம் பெற்றது. நான் என்னோட ட்ரிப் சீட்ல இந்த டீ கடையோட சீல் வாங்கி கிட்டு வரணும், இல்லனா சென்னை ல  ஏற்று கொள்ள மாற்றார்கள் (இந்த புது சட்டம் எப்ப போட்டாங்க).

நானும் நம்பாம கேட்டா , அவரோட ட்ரிப் சீட்ல , செந்தூர் ... அப்படின்னு அந்த கடையோட சீல் காட்டினாரு.

அநியாய பகல் கொள்ளையா இருக்குது. இந்த பஸ்ல எல்லாம் திருடர்கள் ஜாக்கிரதை போர்டு இருக்கும், அந்த போர்டு இந்த கடைல வச்சா நல்ல இருக்கும்

இங்க உங்களோட பயண அனுபவத்தியும் பதியலாம்.

Wednesday, May 23, 2012

பெட்ரோல் விலை , இந்திய ருபாய் மதிப்பு - ஒன்னும் புரியல


பெட்ரோல் விலையேற்றம் என்ன காரணமா இருக்குமுன்னு தேடி பார்கிறேன், கண்டு புடிக்கவே முடியல..

அணைத்து பெட்ரோல் நிறுவனங்களும் லாபம் காட்டுது, அதே நேரத்துல ஆயில் விலையும் குறைந்து இருக்கு..

எதுக்காக இந்த விலை ஏற்றம்.


Crude ஆயில் விலை ஒரு வருடத்துக்கு முன்பு 101 $ தற்போது 90 $ [ -10% ]
இந்திய பெட்ரோல் விலையேற்றம்


இந்திய ஆயில் நிறுவனங்களோட வருமானம்(in Crore)

Indian Oil Corporation Ltd

Dec ' 11Sep ' 11Jun ' 11Mar ' 11Dec ' 10
Sales1,15,641.8789,185.131,01,284.5198,722.6580,897.33
Operating profit11,158.26-5,322.21-1,861.845,782.673,291.71
Interest1,565.201,484.001,037.59867.45723.30
Gross profit9,940.57-6,221.74-2,495.215,395.253,357.04
EPS (Rs)10.25-30.83-15.3216.086.73


Hindustan Petroleum Corporation Ltd

Dec ' 11Sep ' 11Jun ' 11Mar ' 11Dec ' 10
Sales48,047.4537,104.2240,916.9139,892.2134,055.99
Operating profit3,702.60-2,869.69-2,568.442,200.51780.23
Interest698.17302.84264.14225.54241.66
Gross profit3,161.95-2,949.44-2,692.92401.52683.46
EPS (Rs)80.48-99.36-90.9633.156.23



Bharat Petroleum Corporation Ltd

Dec ' 11Sep ' 11Jun ' 11Mar ' 11Dec ' 10
Sales58,846.7942,301.8646,139.6145,271.9736,685.93
Operating profit3,709.72-2,694.80-2,164.221,664.55748.83
Interest517.41453.16334.92315.71274.74
Gross profit3,608.91-2,769.23-2,071.821,858.92784.38
EPS (Rs)86.84-89.32-70.8625.875.18



ஆஸ்திரேலியா $ இந்திய மதிப்பு ஒரு வருடத்துக்கு முன்பு 47 தற்போது 55 [ +20% ]

ஐரோப்பா euro  இந்திய மதிப்பு ஒரு வருடத்துக்கு முன்பு 64 தற்போது 70 [ +10% ]

இங்கிலாந்து பவுண்ட் இந்திய மதிப்பு ஒரு வருடத்துக்கு முன்பு 77 தற்போது 87 [ +15% ] 
சிங்கப்பூர் $ இந்திய மதிப்பு ஒரு வருடத்துக்கு முன்பு 36 தற்போது 44 [ +20% ]   

அமெரிக்க $ இந்திய மதிப்பு ஒரு வருடத்துக்கு முன்பு 45 தற்போது 52 [ +18% ]


Monday, August 22, 2011

அண்ணா ஹசாரே வை எதிர்க்கும் சுயநல விட்டில் பூச்சிகள்


அண்ணா ஹசாரே, இன்றைய தேதிக்கு அன்னைவரல்லும் எதோ ஒரு காரணத்குக்காக உச்சரிக்க படும் ஒரு பெயர்.

எங்கெல்லாம் நல்லவங்க போற்ற படரங்களோ அங்கெல்லாம், தன்னோட தவறான கருத்துக்கள பதிவு பண்றதே ஒரு வேலைய செய்றவங்க நிறைய பேர் இருக்காங்க, ஆனா இவங்கள் எல்லாருமே சரியான பயந்தான்கோலிகள், தனக்கு எதிர யாராவது கருத்து சொன்ன உடனே அத அழிகிறது ஆனா அதுக்கு சரியான விளக்கம் குடக்கனும் அப்படின்னு, ஒரு சிறு முயற்சி கூட பண்றது கிடையாது.

நான் அன்ன ஹசாரே வரவேற்று போட்ட கம்மெண்ட பல பேர் போடறதே கிடையாது,

அதனால, இனி யாரு அண்ணா ஹசாரே பற்றி எதிர் கருத்து சொன்னாலும், இந்த பக்கத்துல பதில் சொல்லலாம், அப்படின்னு இருக்கேன், இதே அனுபவம் பலருக்கு இருக்கலாம், அப்படி இருக்கறவங்க, அந்த கட்டுரையின் தலைப்பு மற்றும் எழுதியவங்க பெயர் போட்டு கமெண்ட் போடலாம்.

நானே ஆரம்பிக்கிறான்.

அன்னா ஹஜாரே என்ற 80வயது பயங்கரவாதி! -

http://donashok.blogspot.com/2011/08/80.ஹ்த்ம்ல்

என்னோட கமெண்ட்.

ஏற்கனவே அன்னா ஹஜாரே நடத்திய சீசன்1 உண்ணாவிரதத்தைப் பற்றி அன்னா ஹசாரே என்ற ஊறுகாய்!ங்குற கட்டுரையில் எழுதியுள்ளேன். இப்போ சீசன்2 உண்ணாவிரதத்தைப் பற்றி புதிய கருத்துக்கள் ஒன்றுமில்லாத பட்சத்தில் சில புதிய கேள்விகளும் பயங்களும் ஆட்கொள்ளுகின்றன.

[இந்த தள்ளாத வயசுல, தான் என்ன கஷ்ட்ட பட்டாலும்,தன்னக்கு அப்புறம் வர சந்ததி நல்ல இருக்கனும், அப்படின்னு நெனைகரவங்க உங்களுக்கு ஊறுகாய், அப்படின்னா நீங்க நல்ல இருக்கனும் அப்படி உங்களக்காக கஷ்ட்ட பட்ட உங்க அப்பா அம்மா எல்லாம் என்னனு கூப்புடு வீங்க....]

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கத்தை ஒரு கிழவர் ஒரு கும்பலை சேர்த்துக்கொண்டு பட்டினி ஆயுதத்தால் மிரட்டுகிறார். ஊழல் மலிந்து கிடப்பதற்கு காரணம், இருக்கும் சட்டங்களை ஒழுங்காக பயன்படுத்தாததால் தான்

[இத்தன வருஷம் நாட்ட ஆண்டு உங்களால சட்டத்த சரி வர பயன் படுத்த முடியல , ஏன் பயன் படுத்த மறுக்குரிங்க, அப்படின்னு கேள்வி கேட்கனும்ன நமக்கு கொஞ்சம் அதிகாரம் வேணும் சார், அதுக்கு தான் இந்த லோக்பால் சட்டம் வேணும் அப்படின்னு போரடறாரு]

!நல்ல வேலை நீங்க காந்தி உண்ணா விருத்தம் இருந்த பொது இல்ல, கிழவர் என்னமா சொல்றிங்க, அவரோட வயசுக்கு கொஞ்சம் மரியாத..!

தயவு செய்து, அந்த மெய் பொருள் காண்பது அறிவு, அப்படின்னு இருக்கறத எடுத்துருங்க, அணைத்து உயிர் களுக்கும் மதிபளிகனும் அப்படின்றது தான் முதல் பாடமே..

ஒரே இடத்தில் அதிகாரம் அனைத்தும் குவிவது சர்வாதிகாரம் ஆகாதா?

[இதனால தான் பிரதமர் என்ன செய்தாலும் நம்பளால கேள்வி கேட்க முடியல அதாவது புரியிதே சந்தோசம்]

ஜனநாயகம்,ஜனநாயகம்,அப்படின்னு நிறய இடத்துல எழுதி இருக்கீங்க, மக்களால தேர்ந்தெடுத்த ஆட்சி நடக்கணும்னு சில நூறு வருஷம் போராடி வாங்கன நம்ப சுதந்திரம் என்ன ஆட்சினவது தெரியுமா?

உங்களுக்கு தெரியுமா எந்த மக்கள் மன்மோகன் சிங்க, தேர்ந்தெடுத்தாங்க அப்படின்னு.

மக்களை நேரடிய சந்திக்கவே பயப்படற மன்மோகன் சிங், இதுவரைக்கும் யாரும் நேரடிய தேர்ந்தெடுத்தது அவர் பிரதமரா அகவே இல்ல.

[இந்த கட்டுரை முழுதும், கேவலமா எழுதுன அதிகமான கமெண்ட் கிட்டைகும் அப்படின்ற சுயநலம் மட்டும் தான் தெரியுது]

Monday, January 3, 2011

பாரத பிரதமருக்கு பாமரனின் கடிதம்





மேதகு பாரத பிரதமர் திரு மன்மோகன் சிங் அவர்களுக்கு

ஐயா வணக்கம், நான் இந்த நாட்டோட தென்கோடில இருக்கற ஒரு மாநிலத்த சேர்ந்தவன் அதாவது காங்கிரஸ் கட்சியோட பாரத தாய் சோனியா (காந்தி வேணாம்னு நினைக்கிறன்) மொழில சொல்லனும்னா தீவிரவாதிகள் கூடாரமான தமிழாகத்தோட(காஷ்மீர் பார்ட்-2) சாதாரண பாமரன், எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம் நீங்க அடிக்கடி நம்ப நாடு முன்னேறுது முன்னேறுது, தொழில் வளம் (GDP) நல்லா இருக்கு, வேலை வாய்ப்பு நிறைய இருக்கு, எதிர்பார்த்தத விட நிறைய வரி வருது, இது போல நிறைய சொல்றிங்க, இந்த கதைக்கு அப்புறம் வருவோம்,

ஒரு நாட்டோட நல்ல தலைமை என்பது தன்னோட மக்களுக்கு பாதுகாப்பு வழங்குவது, இது தான் மிக முக்கியமான கடமை என்பது எல்லோருக்கும் தெரியும், இத தான் நம்ப அரசியல் அமைப்பு சட்டமும் சொல்லுது.

இந்த பாதுகாப்புக்காக தான் அணைத்து நாடுகளும் அதிகமா தங்களோட வரி பணத்த செலவிடறாங்க, நாமளும் அத தான் செய்கிறோம், ஆனால் அந்த எதிர்பாத்த பாதுகாப்பு கிடைத்துதா என்று கேட்டா உங்களுக்கே தெரியும் அது இல்லன்னு.

கடந்த பத்து வருடங்களில் மட்டும் 1,40,000 கோடிக்கு பெருமானமுள்ள ஆயுதங்கள் ரஷ்யா, இஸ்ரேல், பிரான்ஸ் மற்றும் பிரிட்டனிடம் வாங்கப்பட்டுள்ளது,இந்த வருடம் $29.46 Billion பாதுகாப்பு துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த பணமெல்லாம் ஒழுங்கா செலவு செய்தாங்கலான்னு எனக்கு சந்தேகம்,

ஏன் இந்த சந்தேகம்னா கடந்த 5 வருடங்களில் மட்டும் உள்நாட்டு தீவிரவாத தாக்குதல்கள் சில இங்கே, உங்களுக்கு எல்லாம் ஞாபகம் இருக்கும் இருந்தாலும் தெரியாத மாதிரி இருப்பிங்க (இது தான் நீங்க இந்த 10 வருட அரசியலில் கற்று கொண்டது) அதனால சொல்றேன்

October 29, 2005 - 67 people were killed and 224 injured in serial bombings in major Delhi markets on Diwali eve. A Pakistani group, Islamic Inquilab Mahaz, claimed responsibility for the attack. The group is linked to Lashkar-e-Taiba.

7 March 2006 - A series of blasts occurred across the Hindu holy city of Varanasi . Fifteen people are reported to have been killed and as many as 101 others were injured. No-one has accepted responsibility for the attacks, but it is speculated that the bombings were carried out in retaliation of the arrest of a Lashkar-e-Toiba agent in Varanasi earlier in February 2006.

July 11, 2006 - Seven explosions ripped through crowded commuter trains and stations in Mumbai, killing at least 200 people and leaving 700 more bloodied and injured. Lashkar-e-Taiba and local Students Islamic Movement of India (SIMI) activists were found to be behind the attacks.

The 2008 Mumbai attacks (often referred to as November 26 or 26/11) were more than 10 coordinated shooting and bombing attacks across Mumbai, India's largest city, by Islamists[5][6] from Pakistan.[7] The attacks, which drew widespread global condemnation, began on 26 November 2008 and lasted until 29 November, killing 164 people and wounding at least 308

On 13 February 2010, a bomb explosion at the German Bakery in Pune killed fourteen people, and injured at least 60 more.

On December 7, 2010, another blast occurred in Varanasi, that killed immediately a toddler, and set off a stampede in which 20 people, including four foreigners were injured.[6] The responsibility for the attack was claimed by the Islamist millitant group, Indian Mujahideen.[7]

சிங்களக் கடற்படையினர் தமிழக மீனவர்களைக் கொலை செய்த எண்ணிக்கை 7.7.2010 இரவுடன் 451 ஆக உள்ளது.

இந்த லிஸ்ட் எழுத ஆரம்பித்தா முடியாது, இதுல கோயம்பத்தூர், மும்பை தொடர் வெடி குண்டு வெடிப்பு எல்லாம் விட்டுட்டேன் அதனால இதோடு நிறுத்திபோம்

இதுல என்னோட சந்தேகம் என்னன்னா நீங்க உண்மையாளுமே எங்களுக்கு பாதுகாப்பு கொடுக்கிறிங்ககளா இல்ல,

இந்த மதுபானத்துல "குடி குடியை கெடுக்கும் , உடல் நலத்துக்கு கேடு" அப்படின்னுட்டு ஸ்டிக்கர்ல ஓட்டிட்டு, நம்பலே அந்த விற்பனைக்கு லைசென்ஸ் கொடுக்கிற மாதிரி, நாங்க பாதுகாப்பு கொடுக்கிற மாதிரி கொடுக்கிறோம் நீங்க எப்ப வேணும்னாலும் வந்து சுட்டு சுட்டு விளையாடுங்கனு அவங்களுக்கும் லைசென்ஸ் கொடுக்கிரிங்க்களா.

ஏன் இந்த சந்தேகம்னா,

எங்ககிட்ட வரிய வாங்கி, எங்களுக்காக நீங்க ரோடு போடரிங்கனு பார்த்தா, வண்டிக்கும் டாக்ஸ், வண்டி ஓட்டற ரோடுக்கும் டாக்ஸ், இது இல்லாம புதுசா ரோடு போட்டு டோல்கேட்னு சொல்லி அங்கயும் பாக்கெட்ட காலி பண்றீங்க,

பொது மக்களுக்கு தேவைன்னு ஆரம்பித்த பொதுத்துறையோட பணமெல்லாம் பொதுமக்களோட வரி பணம், நீங்க என்னடான்னா பெட்ரோல் நிறுவனங்கள் நஷ்டத்துல இயங்குதுன்னு, வாரதுக்கு ஒரு முறை விலை மாறுது, எங்களோட வரி பணத்துல ஆரம்பித்த நிருவனங்கள் நஷ்டத்துல இயங்கினா என்ன பிரச்சினை,

சரி நம்ப பாதுகாப்பு பிரச்சனைக்கு வருவம், ஆள் இல்லாத கடைக்கு டீ ஆத்துற மாதிரி, கொடுக்க முடியாத பாதுகாப்புக்கு எதுக்கு இத்தன கோடி,

அப்படி இல்லனா நீங்க எப்பவும் சொல்ற மாதிரி, அதையும் தனியாருக்கு கொடுத்திடலாம்,

உதாரணத்துக்கு பாகிஸ்தான்ல நம்பளளா உள்நாடுல எதுவும் பண்ண முடியல, அதனால அவங்களுக்கு முன்னுரிமை கொடுக்கலாம்

அப்படி இல்லனா இலங்கை கிட்ட கூட கொடுக்கலாம், ஏன்னா அவங்க நம்ப நாட்டு பார்டர்லேயே வந்து நம்ப மீனவங்கள என்னவேணா பண்ணமுடியுது, அதுமட்டுமில்லாம LTTE கிட்ட தற்காலிக வெற்றிய வேற பெற்று இருக்காங்க,

இவ்வளவு விஷத்தை ஏன் சொல்றேனா, இன்னுமும் இந்த நாடு உங்களத்தான் நம்பிகிட்டு இறுக்கு,

ஏதாவது பாத்து பண்ணுங்க சார்,

இதுல இருக்கறதுலேயே மகா கேவலமான ஒரு விஷயம் இறுக்கு, அது என்னன்னா கடந்த 10 வருடங்கள்ள தீவிரவாதிகளாள இறந்த உயிர்களோட எண்ணிக்கையோட பசியாலயும், பட்டினியாளையும் மற்றும் விவசாயம் பண்ணமுடியாம தற்கொலை பண்ணிக்கிட்டவங்க எண்ணிக்கை அதிகம்.


இப்படிக்கு
ஒரு இந்திய வாக்காளன்
(தமிழன்னு சொன்னா தீவர வாத அச்சுரத்தல் அப்படினு நீங்க சொல்லுவிங்க,
அப்புறம் அதுக்கு வேற எங்களோட வரி பணத்துல உங்களுக்கு பாதுகாப்பு கொடுக்கணும்)

Saturday, January 1, 2011

அண்ணே எனக்கு ஒரு சந்தேகம் - 1



செந்தில் : அண்ணே...அண்ணே....
கவுண்டர் மணி : என்னடா சந்தோசமா ஓடி வர்ற,

செந்தில் : எனக்கு ஒரு சந்தேகம்...
கவுண்டர் மணி : ஆரம்பிட்சிட்டாண்டா...

செந்தில் : காங்கிரஸ் கட்சி மீட்டிங் போட்டு ஏதேதோ பேசறாங்க ஒன்னும் புரியலேனே...
கவுண்டர் மணி : என்னடா உன்னோட சந்தேகம், இந்த .. கட்சிக்காரங்க தான் பாராளுமன்றம் ஏதோ நீதிமன்றம் மாதிரி விசாரணை வை, விசாரணை வைன்னு சொல்றாங்க, அவங்களுக்கும் மறந்து போச்சு , இவங்க என்னைக்கு ஒழுங்கா விசாரணை நடத்தி, உண்மைய மக்கள் கிட்ட சொல்லி இருக்காங்க.

செந்தில் : அண்ணே நீங்க எப்பவும் இப்படிதான், குறை சொல்லியே வாழ்க்கைய ஒட்ரிங்க, பேப்பர் எல்லாம் படிச்சு Knowledge Develop பண்ணிகிங்கண்ணே.

கவுண்டர் மணி : டே ங்கொன்னையா, என்னடா Knowledge, Develop இன்னுன்னு என்ன என்னமோ பேசற.......அப்படி என்னடா பேப்பர்ல படிச்சிட்ட...

செந்தில் : அண்ணே நம்ப பாரத பிரதமர் இனிமே ஊழல இந்தியாவுல அனுமதிக்க முடியாது. அப்படி இப்படின்னு ஏகப்பட்டது பேசிருகிறார். அது மட்டும் இல்ல அன்னை சோனியா அதேன்னேன் மன்மோகன் சிங்கோட பிரதமர், அவங்க என்ன சொன்னங்ககன்னு கேட்டிங்கன்னா இப்படி எல்லாம் பேசவே மாட்டிங்க,

கவுண்டர் மணி : அட ங்கொன்னையா, அப்படி என்னடா புதுசா சொல்லிட்டாங்க, பட்டினி சாவு இந்தியாவுல எங்காவது நடந்தா அந்த தொகுதி M.B தூக்குல போட போறாங்களா.

செந்தில் : நீங்க வேற எப்பவும் ஆப்கானிஸ்தான் அரபி மாதிரியே பேசரிங்க,

கவுண்டர் மணி : சரிடா விஷயத்துக்கு வாடா, உங்க அன்னை அப்படி என்னடா சொன்னாங்க,

செந்தில் : இதுக்கு அப்புறம் அவங்க கட்சிகாரங்க யாரும் பணக்காரங்களா வெளிய தெரிய கூடாது, ஆடம்பரமான வாழ்க்கை வாழகூடாது. மக்களோட கண்ணுக்கு உருத்தர மாதிரி நடக்க கூடாது. எல்லாரும் அவங்கங்க சொத்து கணக்க பொது மக்கள் பார்வைக்கு வைக்கணும், இதுல இருந்து உங்களக்கு என்ன புரியுது.

கவுண்டர் மணி : டே ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், உன்னோட கண்டுபிடிப்ப கொஞ்சம் விளக்கு.

செந்தில் : இதுக்கு மேல காங்கிரஸ் காரங்க மக்களுக்காக சேவை செய்யணும், சொத்து சேக்க கூடாது, உங்களோட சொத்து கணக்கு பொதுவா இருகிறதாலா இனிமேல், நீங்க சொத்து சேர்க்க முடியாது. இனிமேல் இந்தியாவுல களங்கமில்லாத ஒரே கட்சி காங்கிரஸ் அப்படி சொல்லனும்னு, இது போல நிறைய முடிவு எடுதுருக்காங்க, நீங்களே பாருங்க இந்த நாட்டுல உழல ஒழிக்க அன்னை சோனியா என்னலாம் பண்றாங்க பாருங்க,
(கவுண்டர் மணி மொனகல் - காங்கிரஸ் வேற ஊழல் வேறய என்ன ஒரு கண்டுபிடிப்பு)

கவுண்டர் மணி : டே ஆம்லெட் வாயா, எரும நாயக்கன் பட்டில மாடு மேய்க்க்றவன் மாதிரியே யோசிக்கறடா,

செந்தில் : சரி நீங்களே மக்களுக்கு புரியற மாதிரி விளக்குங்க.

கவுண்டர் மணி : டே மாங்கா மடையா, அவங்க என்ன சொன்னாங்கன்னா, சொத்து சேருங்க ஆனா வெளியல தெரியாம பாத்துக்குங்க அப்படின்னு தான்டா சொல்றாங்க,

செந்தில் : அதான் சொத்து கணக்கு காட்டி கொடுத்துடுமே,

கவுண்டர் மணி : டே உனக்கு வெளக்கம் சொல்லியே நான் வீனா போறன்டா, அதாவது அவங்க என்ன சொல்றங்கனா, உங்க பேர்ல சொத்து வைத்து கொள்ளதிங்க, உங்க பொண்டாட்டி பேர்ல, பிள்ளைங்க பேர்ல, பேர பிள்ளைங்க பேர்ல, எழதி வைங்க, அதுக்க அப்புறம் நீங்க உடனே ஏழையா மாறிடுவிங்க அப்படின்னு அரசியல் பொருளாதரத்த விளக்கராங்கடா.

செந்தில் : அண்ணே ம் மும் ம், ம் மும் ம், அண்ணே..அண்ணே..அண்ணே,,,

கவுண்டர் மணி : டே என்னடா திடிர்னு அழ ஆரம்பிச்சிட்ட, உன்னக்கு தெளிவா விளங்கிடுட்சா...

செந்தில் : அண்ணே இது சோகம் இல்லனே, ஆனந்த கண்ணீர், தமிழந்தான் எல்லருக்கும் எல்லாத்துக்கும் முன்னோடி, நான் ஒரு தமிழன்னு நினைச்சா பெருமையா இறுக்கு

கவுண்டர் மணி : அட அது என்னடா திடீர் ஆனந்த கண்ணீர்..இதுல எங்கடா தமிழன் வந்தான்.

செந்தில் : சொத்து பிரிச்சுட்டு, சொத்து கணக்கு காட்றது அப்படின்னு ஒன்னு இருக்கறதே நம்ப தலைவரு தான்னே அறிமுகபடுத்துனாறு.

கவுண்டர் மணி : டே ங்கொன்னையா, நீ எப்படா இப்படி எல்லாம் யோசிக்க ஆரம்பிட்ச...எப்பவும் போல அடி வாங்கி கொடுக்கமா விட மாட்ட போல இருக்கு,
பொது ஜனங்களே இந்த கருத்துக்கும் என்னக்கும் எந்த சம்பதமும் இல்ல.